Wednesday, June 21, 2017

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் வழங்கிய "ரமலான் கிட்"

இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ''ரமலான் கிட்'' புதுவலசையில் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் ''ஷஹர் மற்றும் இப்தார்'' உணவு தேவைகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் ரூ.2000 மதிப்பிலான ''ரமலான் கிட்'' வழங்கி வருகிறது. 

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில்  பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. கண்ணியமிகு ரமழான் மாதத்தில் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் விதமாக கடந்த 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை யூனிட் சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி  அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, May 29, 2017

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கிணறு உதவி..!

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதனை கடந்த 27.05.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர்.முஹம்மது ரஸீன் அவர்கள்  பயனாளிக்கு வழங்கினார்.

Tuesday, May 23, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுவலசை பள்ளியில் 99 சதவிகித தேர்ச்சி..!

கடந்த மே 19-ந்தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நமது பள்ளி  99% தேர்ச்சி பெற்றுள்ளது.
 நமதூர் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 85 மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில்  பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் மட்டும்  தோல்வி அடைந்துள்ளார். மேலும், கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும்  நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சிறப்பு கோடைகால பயிற்சி முகாம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம்,புதுவலசை யூனிட் சார்பாக கடந்த மே 2 தேதி முதல் 12ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி வகுப்புகள், தனித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடற் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.

Dua For Gaza