Sunday, February 15, 2015

சாலை சீரமைப்பும், SDPI போராட்டமும் ஓர் விரிவான பார்வை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் பல கட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக கோப்பேரி மடம் முதல் ஆற்றங்கரை வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி  தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முதல் கோப்பேரி மடம் வரையிலான தார் சாலை மாவட்ட தலைநகரான இராமநாதபுரத்துடன் இப்பகுதியை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம்,ஆற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த இந்த சாலையானது கடந்த பல வருடங்களாகவே மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கடினமான நிலையில் காணப்பட்டது. அவ்வப்போது, தற்காலிகமாக போடப்படும் சாலைகள் போடப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போய்விடும் அவலமும் இருந்து வந்தது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.


இதனைத் தொடர்ந்து மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தேசிய அரசியல் பேரியக்கமான எஸ்.டி.பி.ஐ தன்னுடைய போராட்ட அரசியலை தொடங்கியது. அனைத்து சமூக பிரமுகர்கள் சந்திப்பு, சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், அமைச்சர் சந்திப்பு, எம்.எல்.ஏ சந்திப்பு, ,மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தல், மக்கள் மத்தியில் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் அதனைத் தொடர்ந்து கைது என பல கட்ட தொடர்  போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ முன்னெடுத்து சென்றது. அதன் விளைவாக இன்று முதல் கட்டமாக அழகன்குளம் முதல் தமரை ஊரணி வரையிலான சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாமரை ஊரணியில் இருந்து புதுவலசை வழியாக கோப்பேரி மடம் வரை செல்லும் சாலையும் விரைவில் சீரமைக்கப் பட தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.....

என்றும் சமூக பணியில்....
எஸ்.டி.பி.ஐ கட்சி (SDPI)
திருவாடனை சட்டமன்ற தொகுதி,
இராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு).














0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza