Thursday, June 30, 2011

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்

salman kurshee
புதுடெல்லி:இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

அமைச்சரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த சச்சார் கமிட்டி செயலாளர் உறுப்பினராகயிருந்த பிரபல பொருளாதார வல்லுநர் அபூ ஸாலிஹ் ஷெரீஃப் சல்மான் குர்ஷிதிற்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Wednesday, June 29, 2011

திண்டுக்கல் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம்!

பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றது.

வரலாறு புகட்டும் பாடம்

islamic warrior
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.

உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.

முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து வரும் தீர்ப்பு

patna
பாட்னா:மதக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு  நீதி கிடைப்பதற்கு தாமதமாவதர்க்கும் மிகக் குறைவான தண்டனை அளிப்பதர்க்குமான தற்போதைய ஒரு எடுத்துக்காட்டு. பிகாரில் 21 வருடங்களுக்குப் முன்னர் நவாடா மாவட்டத்தில் குலினி கிராமத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் 37 நபர்களை நிரபராதிகள் என்றும் 10 நபர்களை குற்றவாளிகள் என்றும் கூறி பீகாரின் நவாடா மாவட்டத்தின் நீதிமன்றம் கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இவழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனையை ஜூலை 29-ம் தேதி நீதி மன்றம் அறிவிக்கும் .

கனிமொழி அப்ரூவராக மாறுவாரா?-தி.மு.க கலக்கம்

kanimoli
சென்னை:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் மற்றும் கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அப்ரூவர்களாக மாற்ற சி.பி.ஐ முயற்சி மேற்கொண்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற ஸ்வான் டெலிகாம் உரிமையாளர்களான மும்பையில் டி.பி ரியாலிட்டியிடமிருந்து கலைஞர் டி.விக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கலைஞர் டி.வியில் 20 சதவீதம் பங்குரிமையாளரான கனிமொழியின் மீது சதித்திட்டம் தீட்டிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 பாக்.சிறை கைதிகள் விடுதலை

prisoners-fishermen-wagah-file-afp-640x480
அமிர்தரஸ்:இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 14 பாகிஸ்தானியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.சட்டத்திற்கு புறம்பாக நாட்டின் எல்லையை கடந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 10 மீன் பிடித்தொழிலாளிகள் உள்பட 14 பேர் கொண்ட குழுவை வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

சுனில் ஜோஷி கொலை:என்.ஐ.ஏ புதிய எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது

sunil joshi guru ji
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு சூத்திரதாரியாக திகழ்ந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) புதிய எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் தொடர் விசாரணை நடத்த உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி தேடப்படும்.

சுனில் ஜோஷி கொலை வழக்கில் மத்திய பிரதேச மாநில அரசு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்த போதிலும் ஜோஷியை கொலை செய்வதற்கு விசாலமான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பது என்.ஐ.ஏவின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து புதிய முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) என்.ஐ.ஏ பதிவு செய்துள்ளது.

அஜ்மீர் குண்டு வெடிப்பு:கேரளாவை சார்ந்த சுரேஷ் நாயர் உள்பட நான்கு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

suresh
புதுடெல்லி:அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரளாவை சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர் உள்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

இவர்களை கைது செய்ய போதிய தகவல்களை அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் நாயர், ரமேஷ் கோஹில், மஹத் பாயி, பாவேஷ் பட்டேல் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மஹத் பாயியை சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் என்.ஐ.ஏ தேடி வருகிறது.

2007 டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷி கொலை செய்யப்படும் முன்பு மஹத் பாயி சுனில் ஜோஷியுடன் தங்கியிருந்தான். பின்னர் அவன் தலைமறைவாகிவிட்டான். மூன்று நபர் கொல்லப்பட்டு 17 பேருக்கு காயமேற்பட்ட அஜ்மீர் குண்டுவெடிப்பின் சதித்திட்டம் தீட்டியதிலிருந்து 2007 அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நிகழும் வரையிலான நடவடிக்கைகளில் நான்கு பேருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ வெளியிட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியின் கட்டளைப்படி இவர்கள் அஜ்மீர் தர்காவில் குண்டை வைத்துள்ளனர்.

Sunday, June 26, 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.

பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

ருவாண்டா இனப்படுகொலை அமைச்சருக்கு ஆயுள்தண்டனை!

ருவாண்டா இனப்படுகொலை தொடர்பாக ஜ.நா. அனுசரணை நீதிமன்றம் அன்னாட்டின் முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தன்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 2001 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை நடைபெற்ற காலத்தில் அன்னாட்டு அமைச்சராக இருந்த போலினின் கண்காணிப்பின் கீழ் சிறுபான்மையின மக்கள் மற்றும் தாராளவாத போக்குடையவர்கள் என எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டு தப்பவைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து பேர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை சமர்பித்தது தேசிய புலனாய்வு ஏஜன்சி ஆன என்.ஐ.ஏ.

மேற்குறிய ஐந்து பேர்களின் குற்றப்பத்திரிக்கையில் பல இடங்களில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் வருகிறது.

இவர் குற்றவாளிகளுக்கு பணஉதவி மற்றும் ஆலோசனை வழங்கி அந்த குற்றத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் இவரை குற்றவாளியாக்கி இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கார்பரேட் சாமியார் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!

 சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

Saturday, June 25, 2011

மனங்களை ஒன்றிணைத்து மானத்திற்கு மரியாதை கொடுத்த இஸ்லாம்

இந்தியத் திருநாட்டில் குற்றங்கள் மலிந்து ஊழல்கள் பெருகி ஊழல் பெருச்சாலிகள் வாழ்க்கையை சுகமாய் அனுபவிப்பதோடு மட்டும் அல்லாமல் நாட்டையும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் விற்று வருகின்றனர். பணக்காரன் மேலும் தன் பணத்தை பண்மடங்காக பெருக்கி இந்திய வங்கிகளில் இடமில்லாமல் ஸ்விஸ் வங்கியை நாடுகிறான்.

ஏழைகளோ இருப்பதற்கு இடமில்லாமல், உழுவதற்கு நிலமில்லாமல், வாழ்வாதார உரிமைக்கு அரசிடம் வட்டிக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மரணத்தை நோக்கிய பயணத்தில் விழுகிறான். கார்கில் போரிலிருந்து, கன்னியாகுமரி கார்ப்பரேஷன் கழிவறை வரை தொடரும் ஊழல் குற்றங்கள் ராடியாவையும், ராஜாவையும் விட்டு விடுமா என்ன?

இவ்வாறு ஒருபுறம் ஊழலில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் நாடு, மறுபுறம் நாட்டை ஆழ்கின்றோம் என்ற பெயரில் அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் அரசியல்வாதிகள். வல்லரசாக்க திட்டம் என்ற போர்வையில் அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைத்துக் கொண்டிருக்கின்றனர். அடகு வைத்தால் அதற்கு ஆதாரம் தேவையல்லவா? அதையும் குறையில்லாமல் செய்ய நினைத்த கூட்டம் EUM (End Use Monitory Agreement) என்ற பெயரில் ஒப்பந்தமும் செய்து விட்டார்கள்.

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.  தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

ஊடகத் துறையினரை குறிவைக்கும் மொசாட்

OurUmmah: எகிப்திய மாநில பாதுகாப்பு உச்ச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த ஒரு எகிப்திய வர்த்தகர் மற்றும் இரண்டு சியோனிஸ்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது தாரிக் அப்துல் ரஸ்ஸாக் ஹுசைன் என்ற 37 வயதான  எகிப்திய வர்தகருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு இவர் உளவு வேலை செய்தமைக்கு சீனாவில் இவருக்கு ஒரு வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது இவருடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு சியோனிஸ்டுகளுக்கு இஸ்ரேலிய மொசாட் உளவு அமைப்பின் உறுபினர்களாகும் என்று எகிப்து தகவகள் தெரிவிக்கின்றது. தாரிக் அப்துல் ரஸ்ஸாக் ஹுசைன் மொசாட் உறுபினர்களுடன் வேலை செய்த காலப்பிரிவில் அரபு உலகில் வாலிபர்களை இஸ்ரேல் மொசாட் உளவு அமைப்புக்கு முகவர்களாக உள்ளவாங்க முயன்று வந்துள்ளார்.

நெல்லையில் சிறப்பு குற்றப்பிரிவில் அதிரடியாக 25 காவலர்கள் நியமனம்!


நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதத்தில் 9 துணை காவல் பிரிவுகளுக்கு சிறப்பு குற்றப்பிரிவு காவலர்கள் 25 பேர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத் தில் அதிகளவில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்காக கடந்த மாதம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி உத் தரவுபடி 9 துணை காவல் பிரிவுகளிலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 முதல் 6 காவலர்கள் சிறப்பு குற்றப்பிரிவு சிறப்புப்படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படை யினர் சம்பந்தப்பட்ட துணை காவல்துறை பிரிவுகளில் நடக்கும் குற்ற நிகழ்வுகளில் ஈடுப்பட்டு தலைமறைவாக உள்ளவர் களையும், தற்போது உள்ள குற்றவழக்குகளில் கைது செய்யப்படாத குற்றவாளி களை கண்டு பிடிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்!

தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டம்  மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை 24.06.2011 மாலை 4 மணிக்கு இலங்கை துணைத் தூதரகம் முன்பு நடைபெற்றது. .

சமையல் கேஸ், மண்ணெண்ணெய், டீசல் விலை அதிரடி உயர்வு!

சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 50, டீசல் லிட்டருக்கு ரூ 3, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2 என்ற விகிதத்தில் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கூடி விலை உயர்வு குறித்து விவாதித்து அதற்கு ஒப்புதல் தந்தது. அதன் பிறகு விலை உயர்வு தொடர்பான இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!

வாஷிங்டன்: இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள ரச்சல் கூஸ் தலைமையிலான குழுவினர், சிறு வயது உடல் பருமன் குறித்து 6,750 குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டார்.

Friday, June 24, 2011

ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 ஆயிரம் மோசடி செய்த தாய், மகன் மீது வழக்கு!

தூத்துக்குடியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 ஆயிரம் மோசடி செய்த தாய், மகன் மீது காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி முனியசாமிபுரம் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சப்பாணி முத்து.  இவரது மனைவி ராஜம்மாள்.  இவர்களது மகன் சக்திகணேஷ்.  தாயும் மகனும் சேர்ந்து ரூ.10 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

புற்று நோய்க்கு எலுமிச்சை மூலம் மருந்து! அமெரிக்கா சாதனை!

கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

 இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டு பிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பயப்படாது! அஹ்மது நிஜாத்

தெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கு பயப்படவில்லை ஆனால் அப்படி செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார் வியாழக்கிழமையன்று அரசு தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டது.

நாங்கள் அணு குண்டு செய்ய வேண்டும் என்றால்  யாருக்கும் பயப்படத்தேவையில்லை "ஈரான்  தனது  அணு  திட்டங்களை அமைதிப்பணிக்காக மட்டுமே செயல்படுத்தும் மேலும்  எதிர்காலத்தில் அணு உலைகளிலிருந்து  ஆக்கபூர்வமான மின்  சக்தி  உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படும்

மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை இரக்கமற்ற செயல்!

ஜாம்ஷெட்பூர் : ""சில்காரி படுகொலை வழக்கில், மாவோயிஸ்டுகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல்,'' என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநிலம் சில்காரி கிராமத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனூப் உட்பட பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Thursday, June 23, 2011

அல்காயிதாவைவிட இந்தியா ஆபத்தான நாடு - பாகிஸ்தான் மக்கள்

தாலிபான் மற்றும் அல் காய்தாவைவிட இந்தியாவே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியா, அல் காய்தா, தாலிபான் ஆகியவற்றில் பெரும் அச்சுறுத்தல் எது? எனக் கேட்டதற்கு 57% பேர் இந்தியாதான் என பதிலளித்துள்ளனர்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வி!

நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் தலைமையில் நடந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

முன்னரே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராக்குமார் கூட்டினார். இந்தச் சட்டம் நிறைவேறினால்தான் பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். இதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், 14 ஆண்டுகள் ஆகியும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்தச் சட்ட மசோதா கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி மேல்-சபையில் நிறைவேறியது. ஆனால் நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேறவில்லை. பலமுறை அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியும் இந்தப் பிரச்சினையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

துபையிலிருந்து கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்!

துபையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட  2 கிலோ தங்க நகைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் செங்கற்பட்டில் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 4 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் நேற்று புதன் கிழமை செங்கற்பட்டில் வளைத்துப் பிடித்தனர். அவர்களை சோதனையிட்டதில், துபையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட  2 கிலோ தங்க நகைகள் சிக்கின.

ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து!

"பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து, தொழில் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வட்டியை இனிமேல் அரசே செலுத்தும்" என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வங்கிக் கடன் பெற்ற ஏழை மாணவர்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2009-10 கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தீவிரவாத ஊடுருவலை தடுக்க ஆபரேஷன் கேம்லா!!!

தூத்துக்குடி மாவட்டத்தில், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆபரேஷன் கேம்லா ஒத்திகை தொடங்கியது. தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம் ஆகும். ஆகையால் கடல் வழியாக தீவிரவாதிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடக்கூடாது, என்பதற்காக கடற்கரை ஒரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக கடலோர பாதுகாப்பு படையையும் அரசு உருவாக்கி உள்ளது. மேலும் கடற்கரை ஒரங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, படகுகள் மூலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கர சூறாவளி! துறைமுகத்தில் கப்பல் தரைதட்டியது

தூத்துக்குடி துறைமுகத்தில் அடித்த பயங்கர சூறாவளி காற்றால் சேனலை விட்டு மாறி தரைதட்டி நின்ற நிலக்கரி கப்பல், 3 இழுவை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு 50ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றிக் கொண்டு வெளிநாட்டிலிருந்து டைஹர் வெஸ்ட் என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் 10.7 மீ ஆழமே இருப்பதால் பெரிய கப்பல்கள் அதிக டன் சரக்கோடு உள்ளே வரமுடியாது.

தேர்தலில் திமுக தோற்றதற்கு மாணவர்களே காரணம் - பரிதி இளம்வழுதி

"கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியடைய மாணவர்களே காரணம்" என திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

நாகை அபிராமி அம்மன் கோவில் அருகே நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு பேசும்போது,"கடந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டுத் தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

வேலியே பயிரை மேயும் கொடுமை!

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை 10ஆம் வகுப்பு மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு பந்த் காரணமாக 21.06.2011 அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதுதெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

காமடி பீஸு ஊழலை ஒழிக்க போகுதாம்!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தான் எப்போதும் ஆதரவு அளித்து வருவதாக தி.மு.க., தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், மாநிலத்தில் முதல்வர் பதவியையும் ஊழல் எதிர்ப்பு மசோதா வரம்பிற்குள் கொண்டு வர தி.மு.க., ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தாய் பாலுக்கு இணையான பால்!

உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்துகுளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம்புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால்தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

இப்பசுவின் மரபணுக்களில்இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைதாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை.

இலங்கை அரசைக் கண்டித்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்! MMK!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பரப்பு கடந்த சில நாட்களாக கடும் சீற்றத்துடன் காட்சி அளித்தது. காற்றின் வேகத்தில் திசை தெரியாமல் தவித்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கம்யூனிச சீனாவின் வதை முகாம்களுக்கு

OurUmmah: அமெரிக்காவின்  குவாந்தநாமோ, அபூஹிராப் வதை முகாம்கள் போன்று சீனாவின் பல வதை முகாம்களால் கிழக்கு துருக்கி மக்கள் வதைக்கப்பட்டு வருகின்றனர். சீனா சிங்கியாங் என்று சொல்லும் கிழக்கு துருக்கி தேச முஸ்லிம்களை பல அபூ ஹிராப், குவாந்தநாமோ முகாம்களில் வதைத்து வருகின்றது சீனா.

1949 இல் கிழக்கு துருக்கி கம்யூனிச சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது அன்றில் இருந்து கிழக்கு துருக்கி முஸ்லிம்கள் தம்மை அடக்கு முறைகளில் இருந்து விடுவிக்க போராடி வருகின்றனர். சீனா தான் ஆக்கிரமித்த கிழக்கு துருக்கியை சிறிது சிறிதாக கபளீகரம் செய்து வருகின்றது அதன் மக்கள் தொகையில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது பெரும்பான்மை உய்க்ஹூர் -Uyghur- பெரும்பான்மை முஸ்லிம்களை அதன் நகரங்களில் சிறுபான்மையாகியுள்ளது.

Wednesday, June 22, 2011

கண்ணீர் மல்க மகள் கனிமொழியைச் சந்தித்த கருணாநிதி!

2G ஊழல் வழக்கில் சி பி ஐ யால் கைது செய்யப் பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்ட நிலையில் தன் மகளைச் சந்தித்து ஆறுதல் கூற நேற்று காலை டெல்லி சென்ற திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்.

மகள் கனிமொழியைக் கண்டவுடன் கருணாநிதி உணர்ச்சி வசப் பட்டு கண்ணீர் மல்க உருக்கமாகக் காணப் பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது மனைவி ராசாத்தி அம்மாள், மகன் அழகிரி உடன் இருந்துள்ளனர்.

பீகார் முசாஃபர்பூர் பகுதியில் மர்ம காய்ச்சல்: 24 பேர் பலி!

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் பிள்ளைகளை தாக்கும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர்.

’என்கஃபாலிடிஸ்’ எனும் உயிர்கொல்லி காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் பிள்ளைகளை தாக்கியுள்ளது. ஜூன் முதல் வாரத்திலிருந்து அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முசாஃபர்பூர் மாவட்ட அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை கூறுகையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் அனைவரிடமும் காய்ச்சலிலிருந்து மீள்வதற்கான அறிகுறி தெரிவதாக கூறியுள்ளார்.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள்!

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி சில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"தமிழகத்தில் சமச்சீர் கல்வியை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான ஆய்வுக்குழுவில் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களை நியமித்ததை நீக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தவறான தொடர்புகளால் தரிகெடும் நம் சமுதாயம்



தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கையின் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்களை அந்நாட்டின் கடற்படை கைது செய்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த
அதன் விவரம்:

தமிழக மீனவர்கள் 23 பேர் மீன் பிடிக்கும்போது தவறுதலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை நேற்று பிற்பகல் இலங்கை கடற்படைக் கைது செய்து தலைமன்னார் போலீசிடம் ஒப்படைத்துள்ள தகவல் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசு!

ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

“divisions within the Brotherhood” என்ற மாய வசனம்

OurUmmah: எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் மிகவும் கட்டுகோப்பான ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக செயல்பட்டு வந்துள்ளது.இதன் அரசியல் நடவடிக்கைகள் என்பது அதன் ஒரு பகுதி மட்டுமே அரசியலுக்கு அப்பால் அந்த சர்வதேச இஸ்லாமிய இயக்கம் எகிப்திய மக்களின் உள்ளங்களில் மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ளது.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சி காலத்தில் ஹுஸ்னி முபாரக் அரசாங்கத்தால் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். அப்படியிருந்தும் பலமானதும் ஒழுங்கமைக்கப்பட்ட மிகவும் கட்டுகோப்பான அமைப்பாக எழுந்து நிற்கின்றது. இதன் வளர்ச்சியை சகித்துகொள்ளமுடியாத இஸ்ரேல் மற்றும் மேற்குலகம் இந்த இஸ்லாமிய இயக்கத்தை மக்களின் உள்ளங்களில் இருந்து அகற்றவும் , அதை பலவீனபடுத்தவும் பலவீனமாக காட்டவும் பல வழிமுறைகளில் செயல்பட்டு வருகின்றது. 

இதற்கு முதல் படியாக எகிப்தின் இஸ்லாமிய விரோத அல்லது மேற்கு அரசியல் நடைமுறைகளை ஆதரிக்கும் ஊடகங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.

ஆவாரம் பூவு சர்க்கரை நோய்க்கு அரும் மருந்து!

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு.

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

நேட்டோ படைகளால் கொல்லப்படும் லிபிய பொது மக்கள்

OurUmmah: லிபியாவின் சர்வாதிகார் ஜனாதிபதி கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இதை கடாபி மிகவும் கொடூரமாக ஒடுக்க செயல்பட்டார் பலர் பலியாகினர். இதை தொடர்ந்து லிபியாவின் பொது மக்களை பாதுகாக்கபோகின்றோம் என்று கூறி நடவடிக்கையில் இறங்கி உள்ள மேற்கு கூட்டு படைகளும் நோட்டோ படையும் லிபிய மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.

தற்போது லிபியா ஒரு முழுமையான ஆப்கானாகவே மாறியுள்ளது லிபியாவின் பிரதான எண்ணெய் வயல்கள் கடாபிக்கு எதிரான போராளிகளிடம் கட்டுமாட்டில் உள்ளது அவர்களுடன் சேர்ந்த மேற்கு கூட்டு படைகளும் நோட்டோ படையும் இயங்கிவருவதாக மேற்கு தெரிவிக்கின்றது இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் புதிய வான் தாக்குதலை நடத்தியது.

Tuesday, June 21, 2011

உலகின் அதிவிரைவு சூப்பர் கம்ப்யூட்டர் கே - ஜப்பான் அறிமுகம்!

உலகின் அதிவேக கம்ப்யூட்டராக இதுவரை அறியப்பட்டிருந்த சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டரைவிட அதி விரைவு கம்ப்யூட்டரை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் கே சூப்பர் கம்ப்யூட்டர் இதுவரை முன்னிலை வகித்த சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டரின் செயல் திறனை விட மும்மடங்கு வேகமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகின் மிக அதி விரைவு கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருக்கு எதிராக அவரது பணிப்பெண் வழக்கு

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டில் முன்னர் பணியாற்றிய பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராகப் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் சந்தோஷ் பர்த்வாஜ் என்பவர் பணிப்பெண்ணாக முன்னர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதா 9 லட்சம், கருணாநிதி 4.5 லட்சம் - தேர்தல் செலவுக் கணக்கு?

சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்வர் தான் போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் தான் செய்த செலவுகள் ரூ. 9 லட்சம் என்று கணக்கு சமர்ப்பித்துள்ளார். முன்னாள் முதல்வரோ அதில் பாதிதான் செலவு செய்துள்ளாராம்.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தாங்கள் செய்த செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

தினமும் டீ குடித்தால் உடல் குண்டாவதில் இருந்து தப்பிக்கலாம்!

டோக்யோ : நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் கோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து எலிகளை வைத்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

டில்லி, வட இந்தியாவில் நில நடுக்கம்

புது தில்லி : புது தில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.

 உத்தரகண்டில் உள்ள சமோலியில் தான் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று சொல்வது இதனால் தானோ!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், குரங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும், விநோதமான நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக, பத்திரிகை அடிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தல்வாஸ் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அனுமன் கோவிலில் புரோகிதராக இருப்பவர் நிரஞ்சன் பஞ்சோலி. இவர், இரண்டு வயது நிரம்பிய, சிங்கி என்ற பெண் குரங்கை வளர்த்து வருகிறார்.

அதேபோல், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் சைனி என்ற ஆட்டோ டிரைவர், ராஜு என்ற ஆண் குரங்கை வளர்த்து வந்தார். மூன்று வயது நிரம்பிய, இந்த குரங்கிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த பெண் குரங்கை தேடி வந்தார்.

தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

கடந்த நான்கரை ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பின், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுவாமி அசீமானந்த், சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்கரா ஆகியோருக்கு எதிராக இன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பா.ஜ.கவை ஆதரிக்க தயார்! உ.பி முஸ்லிம் அமைப்பு தகவல்!

உத்திரபிரதேசத்தில் வருகின்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.கவை ஆதரிக்கப்போவதாக அங்குள்ள முஸ்லிம் அமைப்பான பஸ்மந்தா முஸ்லிம் சமாஜ் (பி.மு.ச) தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தங்களுடைய சமுதாயத்தினுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பஸ்மந்தா முஸ்லிம் சமாஜ் அறிவித்துள்ளது.

Monday, June 20, 2011

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!

கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

பாதி கறுப்புப்பணம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது - மேனகா காந்தி

 வெளிநாடு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது என்று பா.ஜ.க எம்.பி. மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பரேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவிஸ் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் சொந்தமானது. காங்கிரஸ் கட்சி சிபிஐயை லாக்கரில் வைத்துள்ளது.தேவைப்படும்போது அதை பயன்படுத்துகிறது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாடு திரும்புகிறார்

பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அடுத்த ஆண்டு நாடு திரும்ப முடிவு செய்துள்ளதோடு, தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது லண்டனில் தங்கியிருக்கும் அவர், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். லண்டனில் இருந்தபடியே லாகூரிலுள்ள தனது ஆதரவாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார்.

டாட் காம் (.COM) ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

1980 ஆம் ஆண்டுகளில் அறிமுகமான இணைய தள பெயர்களை தனியாக அடையாளப்படுத்த அவற்றின் இணைய முகவரியின் இறுதியில் .com அல்லது .net மற்றும் .org என்ற மூன்று பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தி இருந்தனர்.பிறகு 2000 ஆண்டின் தொடக்கத்தில் இணைய தளங்களின் எண்ணிக்கை அசுர வளர்ச்சியடைந்ததால், அவற்றின் பின்னொட்டு (Suffix) அடையாளங்களில் மேலும் சில வகைகளை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக .cc, .co போன்றவற்றைச் சொல்லலாம்.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் விசாரிக்க மறுத்ததையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் கொண்ட புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. 20.06.2011 அன்று மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு கர்ப்பிணி பெண், 6 மாத குழந்தை, 5 பேர் பலி!

பீகார் : அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில் பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றார் ஹிந்து பயங்கரவாத இயக்கமான பாரதிய ஜனதாவின் மாநில தலைவரின் மகன் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர் முஸ்லிம் கிராமவாசிகள். அவர்கள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி பயங்கரவாத போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதைப்பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.
 
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையை ஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

2500 பெண்களிடம் மோசடி அறக்கட்டளை நிர்வாகி கைது

சுமார் 2500 பெண்களிடம் மோசடி செய்ததாக அறக்கட்டளை ஒன்றின் நிர்வாகியை ஆரல்வாய்மொழி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி வீராணமங்கலத்தில் சுமார் 6 மாதங்களாக ஸ்ரீ ஆதவன் என்ற அறக்கட்டளை செயல்பட்டு வந்தது.

இந்த அறக்கட்டளை மூலம் அப்பகுதி பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சியும், தாழக்குடி, பூதப்பாண்டி, இறச்சகுளம், புத்தேரி, துவரங்காடு, தோவாளை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த சுமார் 167 சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை தொழிற்கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டது.

துருக்கி ,எகிப்து ஆகியவற்றின் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் சந்திக்கின்றன

எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் உருவாக்கியுள்ள சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் Freedom and Justice Party (FJP) பிரதிநிதிகள் துருக்கி சென்று பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் The Justice and Development Party (AKP) தலைவர்களை சந்தித்து கட்சின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கவுள்ளனர் என்று இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் கட்சியின் தலைவர் Dr. Mohamed Morsy மற்றும் அதன் பொது செயலாளர் Dr. Saad Katatny ஆகியோர் செல்லவுள்ளனர்      இதன்போது இரு கட்சிகளுக்கு இடையிலான மிகவும் நெருக்கமான உறவுப்பாலம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது என்று எகிப்து தகவல்கள் தெரிவிக்கின்றது விரிவாக

பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை

இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித் தொகையானது வட்டியில்லா கடனாகும். உதவித் தொகையை பெறும் பயனீட்டாளர்கள் படிப்பை முடித்த பிறகு வேலையில் சேர்ந்தால் அல்லது படிப்பை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இத்தொகையை எளிதான தவணை முறைகளில் திருப்பி செலுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் MLA ஜவாஹிருல்லா பேட்டி

Dua For Gaza